மெக்சிகோவில் நடைபெற்ற உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸை சேர்ந்த 8 முறை சாம்பியனான செபாஸ்டின் ஓஜியர் முதலிடம் பிடித்தார்.
மலைப்பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் ஓஜியரை விட 27.5 வினாடிகள் பின்னால் வந்த பெல்ஜியத்தை சேர்ந்த தியரி நியூவில்லே இரண்டாம் இடம் பிடித்தார்.
பிரிட்டனை சேர்ந்த எல்ஃபின் எவன்ஸ் 3-வது இடமும், நடப்பு உலக சாம்பியனான கால்லே ரோவன்பெரா 4-வது இடத்தையும் பிடித்தனர்.