சீமான் மனைவிக்கு ரூ.1000 உரிமை தொகை கிடைக்குமா.? – நெட்டிசன்கள் கேள்வி.!

இல்லத்தரசிகளுக்கு ‘மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும்’ என

தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தனர்.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முக ஸ்டாலின், ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, ‘‘நான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன். மகளிருக்கான உரிமைத் தொகை நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும்’’ என தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் தமிழக சட்டப்பேர்வையில் இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட நிதி நிலை அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் திட்டம் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதையும் எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

சட்டப் பேரவையில் வெளிநடப்பு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘‘இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்ட அறிவிப்பில் தகுதியான நபர்களுக்கு என்று அறிவித்துள்ளார்கள். எந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள். அதுமட்டுமல்ல 7,000 கோடி ரூபாய் மட்டும் தான் ஒதுக்கியுள்ளீர்கள். இதை வைத்து ஒரு கோடி பேருக்கு ஒதுக்க முடியுமா? எனத் தெரியவில்லை’’ என்று கூறினார்.

அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘‘ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

விந்தணு பரிசோதனைக்கு விந்து சேகரிக்கும் முறை

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியான நபர் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இது குறித்து பெரியாரிய ஆதரவாளர் கபிலன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘2021 ஆம் ஆண்டு வேட்புமனுவில் தன்னுடைய ஆண்டு வருமானம் 1000 ரூபாய் என்று தாக்கல் செய்தார் அண்ணன்

. ஆகவே தமிழக அரசு வழங்கும் குடும்ப தலைவிக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு மிக தகுதியான நபர் அண்ணியார் அவர்களே.

ஆகவே அந்த 1000 ரூபாயை தகுதியின் அடிப்படையில் அண்ணன் குடும்பத்திற்கு வழங்கினால், 10-20 முட்டை அவித்து நெய் சோறு வைத்து 3 மணிக்கு வரும் காக்காவிற்கு சாப்பாடு வைக்க உதவியாக இருக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.