டெல்லி: தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. விமான நிலையத்திற்கான இடத்தை இறுதி செய்வது மாநில அரசின் கடமை என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மாநிலங்களவையில் உறுப்பினர் கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார்.