புதுச்சேரியில் மூடப்பட்டிருக்கும் அனைத்து அரசு சார்பு நிறுவனங்களை உடனே திறக்கக் கோரியும், நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், அதன் ஊழியர்கள் 65 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக சட்டப்பேரவைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.