மாமல்லபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரியத்தைக் கண்டித்து, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன் என்பவரும் அவரது 10 வயது மகன் ஹேமநாதனும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தாழ்வாகச் சென்றுகொண்டிருந்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
கடந்த ஓராண்டு காலமாகவே அந்த மின்கம்பி பழுதாகி தாழ்வாக சென்றுகொண்டிருந்ததாகவும் பலமுறை புகாரளித்தும் மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் உறவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.