மதுரை: அறநிலையத்துறையின் கீழ்உள்ள கோயிலில் திருவிழா நடத்த குழுஅமைக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அறநிலையத்துறை கீழ் உள்ள கோயிலின் விழா அறிவிப்பில் தனி நபர் செல்போன் எண் அச்சிடுவது ஏன். மொபைல் போன் எண்கள் இல்லையெனில் கோயில்களுக்கு நன்கொடை செலுத்த இயலாதா என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐகோர்ட் உத்தரவுகளை பின்பற்றாதது பற்றி அறநிலையத்துறை மதுரை மாவட்ட இணை ஆணையர் விளக்கமளிக்க ஆணையிட்டுள்ளனர்.