பிரித்தானியாவில் டெவோன் பகுதி பாடசாலை ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர் பணியில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் பணியில் இருந்து தடை
மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான, விவாகரத்து பெற்ற ஆசிரியர் லிண்ட்சே பாயர் என்பவரே, ஆசிரியர் பணியில் இருந்து தடை செய்யப்பட்டவர்.
வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியை நேரிடையாக சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் பாயர் பெற்றிருந்தார்.
Credit: Ben Lack
மட்டுமின்றி, மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பது குறித்து பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
46 வயதான பாயர் எழுத்தாளர் மட்டுமின்றி கல்வியாளரும் மொடலுமாக செயல்பட்டு வந்துள்ளார்.
2016ல் ஒருமுறை வில்லியம் – கேட் தம்பதியை பாயர் சந்தித்து உரையாடியுள்ளார். பாயருடன் இளவரசி கேட் சில நிமிடங்கள் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது இவர் டெவோன் பகுதி பிரபல பாடசாலையில் வரலாறு பாடத்திற்கான ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
ரகசியமாக ஒருவர் அளித்த புகார்
ஆனால் 2022ல் அவர் தொடர்பிலான விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து சுமார் 5 ஆண்டுகளுக்கு ஆசிரியர் பணியில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
Credit: Ben Lack
மட்டுமின்றி, தமது தவறை அவர் ஒப்புக்கொண்டதாகவே கூறப்படுகிறது. 2018 முதல் 2020 வரையில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் ரகசியமாக ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2022 மே மாதம் முதல் அவருக்கு ஆசிரியர் பணியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது தான் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.