Porn Videos In Patna Railway Station: ரயில் நிலையங்களில் இருக்கும் டிவி திரைகளில் பொதுவாக ரயில் வரும் அறிவிப்பு மற்றும் சில நேரங்களில் விளம்பரங்களும் ஒளிபரப்பப்படும். ஆனால் ஒரு ரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில்தான் இந்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. பாட்னா ரயில் நிலையத்தில் நேற்று (மார்ச் 19) ரயில் ஏறுவதற்காக 10ஆவது பிளாட்ஃபார்மில் ரயில் பயணிகள் பலர் காத்திருந்தனர். அப்போது அங்குள்ள டிவியில் மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்து ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதால் அங்குள்ள பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து, ரயில்வே போலீஸாருக்கு பயணிகள் தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த பகுதிக்கு விரைந்த ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் விளம்பரங்களை ஒளிபரப்பும் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனத்திற்கு உடனடியாக தொடர்புகொண்டு ஒளிபரப்பை நிறுத்தினர். ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட சம்பவத்தை உறுதி செய்த டானாபூரில் உள்ள டிஆர்எம் (Divisional Railway Manager) அலுவலகத்தின் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.
Patna Junction : पर लगे टीवी स्क्रीन पर रविवार को अचानक विज्ञापन के बदले अश्लील फिल्म का प्रसारण होने लगा । एफआईआर दर्ज #railway#Bihar#Trendinghttps://t.co/F5hT0JlI2V pic.twitter.com/autQxykILH
— Ghanshyam Dev (@Ghanshyamdev3) March 20, 2023
தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து, ரயில் நிலையத்தில் இருப்பவர்களிடம் விசாரித்த போது அதே ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையும் ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதாக கூறுகின்றனர். பட்டப் பகலில் பெண்கள் குழந்தைகள் என பலதரப்பட்ட மக்கள் கூடும் ஒரு பொதுஇடத்தில் இது போன்ற ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைப்பதாக அங்கு வந்த பயணிகள் முணுமுணுத்தபடி சென்றனர்.