டோக்கியோ,
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அரசு முறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தரவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர், இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
குறிப்பாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்றுள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருந்தப்படுகிறது.