வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: மூன்று நாள் சுற்றுப் பயணமாக, ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கி, ஓராண்டு மேலாக ஆகியுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று (மார்ச் 20) ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைநகர் மாஸ்கோவில் சீன அதிபர் புடினை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து புடினுக்கு ஜி ஜின்பிங் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புடினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் இந்த மூன்று நாள் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 23ம் தேதி நாடு திரும்புகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement