கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரம், சமூக ரீதியில் வாக்குகளை கவருதல், வாக்குறுதிகள், மக்களின் நிலைப்பாடு,
கர்நாடக தேர்தல் 2023
விரிவான சர்வே உள்ளிட்டவற்றிற்கு ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வியூக நிபுணர்களை ஒப்பந்தம் போட்டு பணியில் அமர்த்தியுள்ளன. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் களத்தில் நேரடியாக குதித்துள்ளார். பெலகாவியில் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் ”யுவ கிராந்தி சமவேஷா” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராகுல் காந்தி அதிரடி
இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, நாட்டிலேயே ஊழலில் மிக மோசமான மாநிலமாக கர்நாடகா இருக்கிறது. அதற்கு உதாரணம் அரசின் 40 சதவீத கமிஷன் விவகாரம். இத்தகைய அரசு தேவையா? என எண்ணிப் பாருங்கள். என்னுடைய இந்திய ஒற்றுமை பயணத்தின் போது கர்நாடக இளைஞர்கள் சில விஷயங்களை முன்வைத்தனர். வேலைவாய்ப்புகள் இல்லை என்றும், அரசின் துறைகளில் ஊழல் கரை புரண்டு ஓடுவதாகவும் குற்றம்சாட்டினர்.
பாஜக திட்டம்
இந்த நாடு இரண்டு, மூன்று பேருக்கு சொந்தமானது அல்ல. அனைவருக்குமானது. குறிப்பாக அதானிகளுக்கு இந்த நாடு சொந்தமல்ல. பாஜகவின் நண்பர்களாக இருப்பவர்களுக்கே இங்கே சலுகைகள் கிடைக்கின்றன. அப்படி என்றால் மற்றவர்கள் எங்கே செல்வார்கள்? என்று கேள்வி எழுப்பினார். இம்முறை காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். மக்களின் குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதுவரை காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் குறைந்தது 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்றினாலே போதும். கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 என கைப்பற்றினர்.
ஆபரேஷன் லோட்டஸ்
இதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் ஆபரேஷன் லோட்டஸ் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் ஆட்சியை கவிழ்த்தது பாஜக. அதன்பிறகு அணி மாறிய எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.
இப்படி ஒரு சூழல் வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே தான் தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு சாதகமாகவே சில கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.