வண்டலூர் அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி, தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த பரத் என்ற அந்த இளைஞர் குடல்வால் சிகிச்சைக்காக கடந்த 17ஆம் தேதி அங்குள்ள தாகூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காலை அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தியபோது நெஞ்சுவலி ஏற்பட்டு பரத் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
போலீசார் வரவழைக்கப்பட்டு சமாதானம் செய்த நிலையில், பரத் ஏற்கனவே தைராய்டு பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் மயக்க ஊசி செலுத்தும் முன்பே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.