யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாக டி.டி.எஃப் வாசன் மீது இரு பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த டி.டி.எஃப். வாசன் என்கிற வைகுண்ட வாசன், இருசக்கர வாகனத்தை மிக வேகமாக ஓட்டி சர்ச்சையில் சிக்குபவர்.
யூடியூப் சேனல் மூலம் டிராவல் குறித்து வீடியோ வெளியிட்டு சிக்கிக்கொள்வார். இவர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
எனவே இவர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் யூடியூப் செய்தி சேனலான இந்தியா கிளிட்ஸ் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து தனியார் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் டி.டி.எப். வாசன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in