உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன்! கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம்


உயிரிழந்த தனது அப்பாவின் சடலத்தின்முன் திருமணம் செய்து, அவரது கடைசி ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் காண்போரை நெகிழவைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் உடல்நிலையில் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது மகன் பிரவீனுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்பதே ராஜேந்திரனின் கடைசி ஆசையாக இருந்தது.

அதேபோல், ஊர் மக்கள், சொந்தபந்தங்கள் முன்னிலையில் வரும் 27-ஆம் திகதி பிரவீனுக்கு சிறப்பாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு முன்பே ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன்! கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம் | Son Marries In Front Of Dead Father Kallakuruchi

இந்த நிலையில், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, உறவினர்களிடமும், மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் பேசி, தனது தந்தையின் இறப்பை அபசகுனமாக நினைக்கவேண்டாம், அவர் ஆசைப்பட்டபடி தனது திருமணத்தை அவரது ஆசிர்வாதத்துடன் அவரது முன்னிலையிலேயே நடந்த விருப்பப்படுவதாக பிரவீன் கேட்டுக்கொண்டார்.

நிலைமையை புரிந்துகொண்ட பிரவீனின் உறவினர்கள் மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் எந்தவித தடையும் தெரிவிக்காமல் இந்த திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.

உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன்! கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம் | Son Marries In Front Of Dead Father Kallakuruchi

இதையடுத்து, பிரவீன் தனது தந்தையை அடக்கம் செய்வதற்ககு முன், அவரது காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்று, தாலியை அவரது கையில் தொட்டு எடுத்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த சொர்ணமால்யாவின் கழுத்தில் கட்டி திருமணம் செய்துகொண்டார். அவருக்கு உறவினர்கள் அனைவரும் உறுதுணையாய் நின்றுள்ளனர்.

ராஜேந்திரனின் மரணத்தை அனுசரிப்பதா, பிரவீனின் திருமணம் தடையில்லாமல் நடந்ததை நினைத்து சந்தோசப்படுவதா என இரண்டு வெவ்வேறு உணர்ச்சியுடன் அங்கிருந்தவர்கள் காணப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைலாகி வைரலாகிவருகிறது.

உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன்! கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம் | Son Marries In Front Of Dead Father Kallakuruchi



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.