சென்னை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதன்கிழமை அன்று சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை முன்னிட்டு எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்.
மாஸ்டர் கார்டு இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்கண்ட சாலைகளில் 22.03.2023 அன்று 12.00 மணி முதல் 22.00 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
பெல்ஸ் சாலை: இந்த சாலையைத் தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து Entry ஆகவும், பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து No Entry ஆகவும் செயல்படுத்தப்படும். பின்பு கிரிக்கெட் விளையாட்டு முடிந்தவுடன் மேற்கண்ட போக்குவரத்து முறை எதிர்பதமாக மாற்றி செயல்படுத்தப்படும்.
பாரதி சாலை: காமராஜர் சாலையிலிருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் MTC மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
கெனால் ரோடு: இந்த சாலை பாரதி சாலையிலிருந்து Entry ஆகவும், வாலாஜா சாலையிலிருந்து No Entry ஆகவும் செயல்படுத்தப்படும்.
வாலாஜா சாலை: அண்ணாசாலையிலிருந்து வரும் M,P,T,W ஆகிய எழுத்துகள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கெனால் ரோடு வழியாக அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு சென்றடையலாம்.
B மற்றும் R ஆகிய எழுத்துகள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகவே சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்குச் சென்றடையலாம்.
காமராஜர் சாலை: போர் நினைவுச் சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் M,P,T,W ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் MTC ஆகியவை பாரதி சாலை வழியாக கெனால் ரோடுக்கு சென்று அந்தந்த வாகன நிறுத்தங்களுக்கு சென்றடையலாம்.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அனைத்தும் PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.
பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள்
அண்ணா சாலையிலிருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம்.
போர் நினைவுச் சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக சென்று PWD அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம்.
காந்தி சிலையிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று PWD அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம்.
மேற்கண்ட மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.