சேலம் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது மாமாவுடன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று ஆணையரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் தெரிவித்ததாவது:- “நான் அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தத்து எடுத்தார். அன்று முதல் எனக்கு சரியாக உணவு வழங்காமல், திட்டி வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டாக அவரும், அவரது வீட்டில் குடியிருக்கும் மற்றொரு நபரும் தினமும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசி, பாலியல் தொந்தரவு தந்து வந்தனர். இது தொடர்பாக தாய் கேட்க சென்ற போது அவரையும் மிரட்டுகின்றனர்.
இதனால், வளர்ப்பு தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் தவறு செய்தவர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை எடுக்காமல் காலம் தாழ்த்தினர்.
தற்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் இந்த நேரத்தில், எனக்கு சரியாக உணவு வழங்காமல் மது அருந்திவிட்டு பாலியல் தொந்தரவு செய்து வருவதால் என்னால் படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆகவே, வளர்ப்புத் தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.