சூரத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கில் நாளை மறுநாள் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மோடியின் பெயர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ மற்றும் குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சூரத் நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா முன்னிலையில் இருதரப்பின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளியன்று முடிந்தது. இதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார். எனவே ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கில் நாளை மறுநாள் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு கூறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீதிமன்ற தீர்ப்பின் போது ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.