முதல் தலைமுறை ஆப்பிள் ஐபோன் ஏலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
ஒரிஜினல் பேக்கேஜிங்கில் சீல் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஆப்பிள் ஐபோன் ஏலத்தில் 54,904 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்) விற்கப்பட்டது.
2007-ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த முதல் தலைமுறை ஆப்பிள் ஐபோனின் அசல் விலை 599 அமெரிக்க டொலர் ஆகும். இப்போது கிட்டத்தட்ட 100 மடங்கு விலை கொடுக்கப்பட்டு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
hypebeast
டிம் குக் கையொப்பமிட்ட ஐபோன் 11, ஸ்டீவ் ஜாப்ஸ்-குறிப்பிட்ட தொழில்நுட்ப கையேடுகள் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் வணிக அட்டை போன்ற அதிக விலைமதிப்புகளைப் பெற்ற மற்ற ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் நினைவுப் பொருட்களுடன் இந்த ஐபோனை, RR Auction ஏலத்தில் முன்னாள் ஆப்பிள் ஊழியர் ஒருவர் விற்றார்.
விற்கப்பட்ட இந்த திறக்கப்படாத முதல் தலைமுறை அசல் ஆப்பிள் ஐபோன், மாடல் A1203, ஆர்டர் MA712LL/A (8GB) ஆகும்.
Twitter@Deccan_Cable
முதல் தலைமுறை ஐபோன் ஒன்று ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முதலிடத்தில் வேறொரு முதல் தலைமுறை ஐபோன் 63,356 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது சாதனையாகும்.