தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்
சட்டப்பேரவையில் 2023-2024ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்
எத்தனை தொழில்கள் செழித்து வளர்ந்தாலும் மனிதனின் அடிப்படை தேவை உணவு ஆகும் – அமைச்சர்
இயற்கையோடு ஆடக்கூடிய கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை மாறியிருக்கிறது – அமைச்சர்
விளைநில பரப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன – அமைச்சர்
தானியங்கள் மட்டும் அல்ல காய்கறிகள் பழங்கள் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டசத்தை பாதுகாப்பது அவசியம்
விளைநிலங்கள் அளவு குறைந்து வருகிறது; எனவே உற்பத்தி அதிகரிக்க வேண்டியது அவசியம்
புன்செய் நிலங்களுக்கும் உரிய பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது – அமைச்சர்
தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 63.43 லட்சம் ஹெக்டேர்
தமிழ்நாட்டில், தற்போது 63 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு உள்ளது
உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை
119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் உயர்வு
ஆறு ஏரிகளை தூர்வாரியதால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகரிப்பு
சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது
குறுவை சாகுபடி பரப்பும் அதிகரிப்பு
2022-23 நிதியாண்டில் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி அதிகரிப்பு
2 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாய மின் இணைப்பு
2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு, இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2021-2022ல் வேளாண் உற்பத்தி அதிகரிப்பு
2020-2021ஆம் நிதியாண்டைக் காட்டிலும், 2021-2022ஆம் நிதியாண்டில், வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது
நெல், பயறு, கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், நேரடி நெல் கொள்முதல் மட்டுமின்றி, பயறு, கொப்பரைத் தேங்காயும் கொள்முதல்
போதுமான அளவில் கிடங்குகள்
குளிர்பதன கிடங்கு, உலர் கலம் , தானிய பாதுகாப்பு கிடங்குகள் போதுமான அளவு அமைக்கப்பட்டன
ரூ.1695 கோடி பயிர் காப்பீடு மானியம்
ரூ.1695 கோடி அளவிற்கு பயிர் காப்பீடு மானியமாக 6 லட்சம் விவசாயிகளுக்கு மேல் வழங்கப்பட்டது
127 மெ.டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு
வரும் நிதியாண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு
வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம்
2021-2022ஆம் நிதியாண்டில் 185 வேளாண் பட்டதாரிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது
ரூ.230 கோடியில் கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
2504 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு
சாகுபடி பரப்பு அதிகரிப்பு – விளக்கம்
ஆறுகள், கால்வாய்களில், தடுப்பணைகள், வயல் சாலைகள் அமைத்ததால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது
ரேசனில் 2 கிலோ கேழ்வரகு வழங்கத் திட்டம்
நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க திட்டம்
20 மாவட்டங்கள் – 2 சிறுதானிய மண்டலங்கள்
சிறு தானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்கள் அடங்கிய இரு சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும்
நாமக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் புதிதாக சிறு தானிய மண்டலங்களில் இணைக்கப்படும்
கிராம வேளாண் முன்னேற்ற குழு
5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்
196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள்
நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கம் மூலம் 196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன
வேளாண் பட்டதாரிகள் தொழில்முனைவோராக…
வேளாண்மை தோட்டக்கலை பட்ட படிப்பு முடித்த பட்டதாரிகள், தொழில்முனைவோராக தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க 4 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ.26 கோடியில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு
விவசாயத்தில், ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு
இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுக்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
இலவச வண்டல் மண் – இந்தாண்டும் அனுமதி
ஏரி, குள வண்டல் மண்ணில் ஊட்ட சத்து இருப்பதால் விவசாயிகள் இவற்றை இந்த ஆண்டும் வயல்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்
ரூ.50 கோடியில் அங்கக வேளாண்மை
நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்