ஆஸ்கர் விருது பெற்ற `நாட்டு நாட்டு’ பாடலின் இசைக்கு ஏற்றவாறு டெஸ்லா கார்களின் விளக்குகளை அந்நிறுவனம் ஒளிரச் செய்யும் வீடியோ, இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதனால் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினருக்கு உலகம் முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், தங்கள் கார்களின் மின் விளக்குகளை ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஏற்ப ஒளிர விட்டு பின்னணியில் பாடலை ஒலிபரப்பு செய்து மரியாதை செய்துள்ளது.
.@Teslalightshows light sync with the beats of #Oscar Winning Song #NaatuNaatu in New Jersey
Thanks for all the love. #RRRMovie @Tesla @elonmusk pic.twitter.com/wCJIY4sTyr
— RRR Movie (@RRRMovie) March 20, 2023
வீடியோவின்படி, நியூஜெர்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அணிவகுத்துள்ள டெஸ்லா கார்கள் அனைத்தும் `நாட்டு நாட்டு’ பாடலின் இசைக்கு ஏற்றவாறு ஒரேபோல ஒளிர்கிறது. காண்போருக்கும் Vibe கொடுக்கும் அந்த வீடியோ, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். அவர்கள் நன்றிக்கு டெஸ்லாவின் நிறுவனரான எலான் மஸ்க், தனது ட்விட்டர் வழியாக ஹார்ட் எமோஜி பறக்கவிட்டிருக்கிறார்!
— Elon Musk (@elonmusk) March 20, 2023