விக்னேஷ் சிவனுக்கு தற்போது சோதனை காலம் என்றே சொல்லலாம். அஜித்தை AK62 படத்தில் இயக்கும் வாய்ப்பை பறிகொடுத்த விக்னேஷ் சிவன் மன உளைச்சலுக்கு ஆளானார். இருப்பினும் தன் அடுத்த படத்தின் மூலம் தன்னை நிரூபிக்க தயாராகி வருகின்றார் விக்னேஷ் சிவன்.
அவரின் இந்த முயற்சிக்கு அவரின் மனைவி நயன்தாரா பக்கபலமாக இருக்கிறாராம். தன் கதை பிடிக்கவில்லை என அஜித் நிராகரித்ததை அடுத்து இளசுகளை கவரும் வகையில் ஒரு கதையை தயார் செய்துள்ளார் விக்கி. அக்கதையை தானே தயாரிக்கலாமா இல்லை வேறொரு தயாரிப்பாளரை அணுகலாமா என விக்கி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் அவருக்கு ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது.
Vijay: விஜய்யிடம் கமல் நடந்துகொண்ட விதம்..உச்சகட்ட வருத்தத்தில் தளபதி..!
இக்கதையை ஓகே செய்த கமல் அடுத்தகட்ட பணிகளை துவங்கும் படி கூறியுள்ளார். இதையடுத்து கடந்தாண்டு வெளியான லவ் டுடே திரைப்படம் இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் அப்படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனை தன் அடுத்த படத்தின் ஹீரோவாக புக் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இக்கூட்டணி உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்தில் அழுத்தமான ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கின்றதாம். அதில் யாரை நடிக்கவைக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவனிடம் நானே நடிக்கிறேன் என நயன்தாரா கூறியுள்ளார்.
தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.இந்த சமயத்தில் நாயகியாக இல்லாமல் முற்றிலும் வித்யாசமான ரோலில் நயன்தாரா நடித்தால் அவரது மார்க்கெட் பாதிக்குமா என்ற கலக்கத்தில் விக்னேஷ் சிவன் இருந்துள்ளார்.
இருப்பினும் தன் மீதும்,விக்னேஷ் சிவன் மீதும் நம்பிக்கை வைத்த நயன்தாரா, நான் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்கிறேன் என கூறியுள்ளார். விக்னேஷ் சிவனுக்கு கண்டிப்பாக தற்போது ஒரு வெற்றி தேவை என்பதால் நயன்தாரா துணிந்து இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றது.