இன்று தமிழக சட்டசபையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். அந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் முக்கியமானதாக, “மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக தங்கம் உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் தென்னையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த, பத்தாயிரம் ஹெக்டர்கள் பரப்பில் தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில், வரும் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்த செயல் விளக்கத்திடல்கள் நடத்தப்படும்.
மேலும், மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகளை தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறுநடவு – புத்தாக்கத் திட்டம் உள்ளிட்டவை 20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.