அரசாங்கத்திற்கு எதிராக டுவிட்டரில் பதிவிட்ட அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சவுதி அரேபியா, தற்போது முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.
16 ஆண்டுகளுக்கு சிறை
சவுதி அரேபிய நாட்டவரான 72 வயது சாத் இப்ராஹிம் அல்மாதி என்பவரே ஒரே ஒரு டுவிட்டர் பதிவால் 16 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்.
அமெரிக்காவில் குடியிருக்கும் இவர், சவுதி அரசாங்கத்திற்கு எதிராக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2021 நவம்பர் மாதம் தமது குடும்பத்தினரை சந்திக்கும் பொருட்டு ரியாத் நகருக்கு சென்றிருந்த அவரை சவுதி பொலிசார் கைது செய்தனர்.
மட்டுமின்றி, விசாரணை முன்னெடுக்கப்பட்டு, அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், அவர் விடுவிக்கப்பட்டது தொடர்பில் அமெரிக்க – சவுதி அரேபிய அதிகாரிகள் எவரும் உறுதி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, அவரது மகன் இப்ராஹிம் தமது தந்தை தற்போது ரியாத் நகரில் உள்ள குடும்ப இல்லத்தில் இருப்பதாக உறுதி செய்துள்ளார்.
ஆனால், அவர் அமெரிக்கா திரும்புவாரா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.
மேலும், சமூக ஊடகத்தில் பதிவிட்டது தொடர்பான அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டதாகவும், ஆனால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
16 ஆண்டுகள் சிறை தண்டனையும் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
14 டுவிட்டர் பதிவுகள்
மேலும், மேல்முறையீடு நீதிமன்றம் கடந்த ஆண்டு அவரது தண்டனை காலத்தை 19 ஆண்டுகளாக அதிகரித்து தீர்ப்பளித்திருந்தது.
மேலும், அல்மாதிக்கு எதிராக மொத்தம் 14 டுவிட்டர் பதிவுகளை அரசாங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
@reuters
அதில், சவுதி அரேபியாவில் பெரும் ஏழ்மை நிலை, மெக்கா மற்றும் ஜெத்தா நகரங்களில் பாரம்பரிய கட்டிடங்களை இடிப்பது தொடர்பிலும், சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்டது குறித்தும் கவலை தெரிவித்திருந்ததுடன், அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.
அல்மாதி மற்றும் பிற அமெரிக்க கைதிகள் தொடர்பில் பட்டத்து இளவரசர் சல்மானிடம் முறையிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.