தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணி முதல் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
அந்த வகையில் இது திமுக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் 3வது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு பொது ரகத்திற்கு ரூ.75, சன்ன ரகத்திற்கு ரூ.100 கூடுதலாக வழங்கப்படும் . 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்.
விவசாயிகளுக்கு ரூ14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும்.
விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும்.