ரஷ்யாவை எதிர்கொள்ள ரூ.2,893 கோடிக்கு ஆயுதம்: உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா| US to send Ukraine USD 350 million in weapons, equipment as battles with Russian forces continues

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: ரஷ்யா உடனான போரை எதிர்கொள்ள ரூ.2,893 கோடி மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உக்ரைனுடன் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் புரிந்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் தற்போது ரூ.2,893 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிபர் ஜோ பைடன் வழங்கிய அங்கீகாரத்தின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,893 கோடி) மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா வழங்க உள்ளது.

latest tamil news

உக்ரைனின் இறையாண்மையை பாதுகாத்து கொள்ளும் வகையில் அதற்கு ஆதரவளிக்க 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து வந்துள்ளன என்பதற்காக அமெரிக்கா பாராட்டு தெரிவித்து கொள்கிறது. ரஷ்யா நினைத்தால் போரை இன்றே முடிவுக்கு கொண்டு வரமுடியும். அதனை ரஷ்யா செய்யும்வரை, எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நாங்கள் துணைநிற்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.