சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்லவர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான 60 பவுன் நகைகள் திருடு போயின. இது தொடர்பாக அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் தன் புகார் மனுவில் கூறியிருந்ததாவது,
போயஸ் கார்டனில் உள்ள என் அப்பா ரஜினிகாந்த் வீட்டில் தற்போது வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான நகைகளை தனியாக லாக்கரில் வைத்து பராமரித்து வருகிறேன். என் தங்கை சவுந்தர்யாவின் திருமணத்திற்கு அணிந்துவிட்டு லாக்கரில் வைத்தேன். கடந்த 4 ஆண்டுகளாக நான் லாக்கரை திறந்து பார்க்கவில்லை.
அந்த லாக்கரில் 60 பவுன் தங்க, வைர நகைகள் மற்றும் பாரம்பரிய நகைகள் இருந்தன. கடந்த 2021ம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் லாக்கர் இருந்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பின்னர் கணவருடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறியபோது அங்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனுக்கு குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்தது.
செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் வசித்தபோது லாக்கர் சாவியை எனது அலமாரியில் வைத்திருந்தேன். அது என் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும். நான் வீட்டில் இல்லாத நேரத்திலும் கூட அவர்கள் அங்கு சென்று வந்துள்ளனர்.
கடந்த மாதம் 10ம் தேதி நான் லாக்கரை திறந்து பார்த்தேன். அப்பொழுது தான் அதில் சில நகைகள் மட்டுமே இருந்ததும், விலை உயர்ந்த நகைகள் பல மாயமானதும் தெரிய வந்தது. அந்த நகைகள் கடந்த 18 ஆண்டுகளாக வாங்கப்பட்டவை.
Dhanush: அதிரடி முடிவு எடுத்த தனுஷ்: அதுக்கு ஐஸ்வர்யா ஒத்துக்குவாரா?
ஒரு ஜோடி வைரம் மற்றும் பழங்கால தங்க நகைகள், நவரத்தின நகைகள், பழங்கால வைரம், ஆரம்,நெக்லஸ், வளையல்கள் உட்பட 60பவுன் நகைகள் காணாமல் போயிருக்கிறது. இது தொடர்பாக 2 பணிப் பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம் இருக்கிறது.
நகை திருட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி என் நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்டமாக பணிப்பெண் ஈஸ்வரியை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக திருடியது தெரிய வந்துள்ளது.
ஈஸ்வரியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நகை திருட்டு தொடர்பாக பிப்ரவரி மாதமே காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம் ஐஸ்வர்யா. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நகைகளை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Niharika: கணவரை பிரிந்த விஜய் சேதுபதி ஹீரோயின்?: மெகா குடும்பத்து ரசிகர்கள் கவலை
ஐஸ்வர்யாவின் மீதமுள்ள 40 பவுன் நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோரை வைத்து படம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.