நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த வந்தே பாரத் அதிவேக ரயில் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் வசதியானது என்பதோடு, இந்த ரயிலில் குறைந்த நேரத்தில் அதி வேகமாகப் பயணம் செய்ய முடியும். நாட்டில் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்தியாவில் 150 நகரங்களை வந்தே பாரத் ரயில் மூலம் இணைக்க இந்திய அரசு தயாராகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 70 வந்தே பாரத் ரயில்கள் 2024 ஆகஸ்ட் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
தாம்பரம் – செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ள இடையேயான ரயில் சேவைகள் உள்ளிட்ட ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.