கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் கச்சிராக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புகழேந்தி அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ,விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் புகழேந்தியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.