டெக்சாஸில் மீண்டும் பாடசாலை ஒன்றில் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் துப்பாக்கிச்சூடு
திங்கட்கிழமை காலை டல்லாஸ் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கிடையில், கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மற்றும் பள்ளி மாவட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகாலை 6:55 மணியளவில் ஆர்லிங்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. பல மாணவர்கள் வசந்தகால இடைவேளைக்குப் பிறகு வகுப்புகளுக்குத் திரும்பும் முதல் நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Amanda McCoy/Fort Worth Star-Telegram
மாணவர் மரணம்
ஆர்லிங்டன் காவல்துறைத் தலைவர் அல் ஜோன்ஸ் இது குறித்து பேசுகையில், சுடப்பட்ட ஒரு ஆண் மாணவர் மருத்துவமனையில் இறந்தார் என்றும், மற்றோரு பெண் தோட்டாவின் சிறு துண்டுகளால் காயப்பட்டதால் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தார். ஜோன்ஸ் அவர்களின் வயது அல்லது வகுப்புகளை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Photo: AP News
தாக்குதல் நடத்திய மாணவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் சாட்டப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் அடையாளத்தை வெளியிட காவல்துறைத் தலைவர் மறுத்துவிட்டார். ஏனெனில் அவர் வயது குறைந்தவர், ஆனால் அவர் அப்பகுதியில் உள்ள சிறுவர் தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.