ஆபாச நடிகைகள் வெளியிட்ட பரபரப்பு ரகசியங்கள்….! டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவாரா…?

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதிகள் மீது பாலியல் புகார்கள் எழுவது வாடிக்கை. இந்த லிஸ்ட்டில் டொனால்ட் டிரம்ப்பும் ஒருவர். 3-க்கும் மேற்பட்ட நடிகைகள் இவர்மீது பாலியல் புகார்களை பொதுவெளியிலேயே அம்பலப்படுத்தி உள்ளனர்.

டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.

கடந்த 2017ம் வருடக்கணக்குபடி, டிரம்ப் மீது மொத்தம் 19 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில்தான் ஆபாச பட நடிகைகளின் புகார்கள் வெளிவர தொடங்கின.

முதன்முதலாக, ஜெசிகா டிரேக் என்ற ஆபாச நடிகை, இந்த புகார் கூறியிருந்தார். “கடந்த 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லேக் தஹூவில் நடந்த கோல்ப் போட்டியின்போது நான் டொனால்டு டிரம்ப்பை முதல்முதலாக சந்தித்தேன். அவர் என்னுடன் பேசினார். கோல்ப் மைதானத்தில் என்னுடன் சேர்ந்து நடந்து வருமாறு கூறினார். பிறகு, என்னை அவருடைய ஓட்டல் ரூமுக்கு அழைத்தார். நான் 2 பெண்களுடன் சென்றேன். ஓட்டல் அறையில் டிரம்ப் என்னையும் மற்ற இரண்டு பெண்களையும் இழுத்து கட்டிப்பிடித்தார். மேலும் எங்களின் அனுமதி இல்லாமலேயே எங்களை முத்தமிட்டார்.

ஆபாசப் படங்களில் நடிப்பது எப்படி இருக்கும் என டிரம்ப் என்னிடம் கேட்டார். நான் என்னுடைய ரூமுக்கு வந்த பிறகு டிரம்ப் போன் செய்து தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார். எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். டிரம்ப் மறுபடியும் போன் செய்து தன்னுடன் பார்ட்டிக்கு வந்தால் 10 ஆயிரம் டாலர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள என்னுடைய வீட்டிற்கு அவரின் விமானத்தில் செல்லலாம் என கூறினார்” இவ்வாறு ஜெசிகா கூறியிருந்தார்.

டிரம்ப் நடத்தை குறித்து தொடர்ந்து மோசமான தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்ததால், அவருக்கான ஆதரவுகளும் மெல்ல மெல்ல சரிய தொடங்கின.

இதற்கு பிறகுதான், அடுத்ததாக ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் ஒரு பகீர் புகாரை கிளப்பினார். தான் வெளியிட்ட ‘புல் டிஸ்குளோசர்’ என்ற புத்தகத்தில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த டிரம்ப்புடன் உறவு குறித்து விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

அதாவது கடந்த 2006ல் டிரம்ப் மனைவி மெலினா குழந்தை பிறப்புகாக சென்றிருந்தபோது, டிரம்ப் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

டிரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவும் தேர்தலில் ஏற்பட்டது. இதற்கு பிறகு, இந்த விவகாரம் தலைதூக்காமல் இருக்கவும், இதுகுறித்து பேசாமல் இருக்கவும் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் நடிகைக்கு வழங்கப்பட்டதாக இன்னொரு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பணம், பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது இன்னமும் வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் தான் தனக்கு தானே ஆப்பு வைப்பது போல் முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி அடுத்த வாரம் செவ்வாய்கிழமை கைது செய்யப்படுவார். போராட்டத்திற்கு தயாராகுங்கள்..” என்று ஒரு டுவீட்டையும் பதிவிட்டிருந்தார்.

பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட தன்னுடைய பதிவில், “ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த சட்டவிரோதமான கசிவுகள்” என்று டிரம்ப் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த 2 நாட்களாகவே இந்த டுவி பரபரப்பாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

நடிகைக்கு 130,000 டாலர்கள் செலுத்திய விவகாரத்தில்தான், டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த வழக்கில் டிரம்ப் மீது குற்றம் சாட்டலாமா? என்று வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர். காரணம், டிரம்ப்புக்கு 76 வயதாகிறது.இதனால் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதியாக மாறுவார்.

குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று டிரம்பின் வழக்கறிஞர் கூறி உள்ளார். டிரம்ப் சொல்லியிருந்தது, இன்றைய தினம் அதாவது 21ம் தேதிதான் என்பதால், ஒருவேளை அவர் இன்று கைதாவாரா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவி கொண்டிருக்கின்றன..!!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பில் கிளிண்டன் மீது 1994-ம் ஆண்டு. பவுலா ஜோன்ஸ் என்பவர் செக்ஸ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேசமயம் 1998-ம் ஆண்டுகளில் கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ்கி செக்ஸ் விவகாரம் அமெரிக்க அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது. முதலில் மறுத்த கிளின்டன்.

மரபணு சோதனையில் குட்டு வெளியானதால் விஷயம் பெரிதானது. இதைத்தொடர்ந்து உண்மையினை ஒப்புக்கொண்டார்.செக்ஸ் புகாரின் பேரில்ஐ. எம்.எப் (இண்டர்நேஷனல் மானிட்டரி பண்ட்) தலைவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் சோபிடல் என்ற நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த போது 32 வயது பணிப்பெண் ஒருவரை கற்பழிக்க முயன்றார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.