ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு விஷயத்தில் திடீர் திருப்பம்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதை குறித்து ஈஸ்வரியிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.