விவேக் முதல் கோவை குணா வரை.. மாரடைப்பால் மரணமடைந்த 10 சினிமா நட்சத்திரங்கள்!

திரையுலகைச் சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பால் இறந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்தவர், கோவை குணா (54). கடந்த ஓராண்டாக சிறுநீரக பிரச்சனையால் டாயாலிஸ் செய்துவந்த அவர், சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், ’சென்னை காதல்’ என்ற படத்திலும் கோவை குணா நடித்துள்ளார். கோவை குணாவின் இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள், பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

image

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் மாரடைப்பால் இறந்துவருகின்றனர். அந்தப் பட்டியல் விவரம் வருமாறு:

1.நடிகர் விஜயராஜ் 

நடிகர் விஜயராஜ் (43), 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இயக்குநர் திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’, ’நாதஸ்வரம்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். பின்னர், திருமுருகன் இயக்கிய ‘எம்மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார்.

2.நடிகர் கிருஷ்ணமூர்த்தி

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, மாரடைப்பால் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி உயிரிழந்தார். இவர், தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

image

3.நடிகர் வெங்கடேஷ்

தமிழ் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ், மாரடைப்பு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி உயிரிழந்தார். சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

4.நடிகர் விவேக்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விக்ரம், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார்.

5.நடிகர் லிட்டில் ஜான்

நகைச்சுவை நடிகரான தனசேகரன் என்ற லிட்டில் ஜான், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். ஐம்புலன், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும், கிராமந்தோறும் கோயில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

image

6.இந்தி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி

இந்தி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி (46) கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

7.பெங்காலி நடிகை ஐன்டிரிலா சர்மா

பிரபல பெங்காலி நடிகையான ஐன்டிரிலா சர்மா (24) மாரடைப்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி உயிரிழந்தார். அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

8.தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் ஈ.ராமதாஸ்

தமிழ் சினிமாவின் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முக திறன்கொண்ட ஈ.ராமதாஸ் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். ராஜா ராஜாதான், சுயம்வரம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, வாழ்க ஜனநாயகம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், அறம், யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, மாரி 2 என ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

9.நடிகர் மயில்சாமி

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். கில்லி, ஆசை, வேதாளம், வீரம், தூள், காஞ்சனா என 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.