சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை பச்சைத் துண்டு அணிந்துவந்து தாக்கல் செய்தார். சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி வேளாண்மையை மாண்பினை எடுத்துக் கூறினார். முன்னதாக சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் அறிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். […]