சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனின் விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இப்போது இந்திய சந்தையில் iQOO Z7 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இது மிட்-ரேஞ்ச் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் பல்வேறு நகரங்களில் விரிவு செய்யப்பட்டு வரும் சூழலில் அதை கருத்தில் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறப்பு அம்சங்கள்
- 6.38 இன்ச் திரை அளவு
- AMOLED டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 920 சிப்செட்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது
- 4500mAh பேட்டரி
- 44 வாட்ஸ் சார்ஜிங்
- டைப் சி யுஎஸ்பி போர்ட்
- 5ஜி சப்போர்ட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- இரண்டு வண்ணங்களில் மற்றும் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது
- 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கிறது
- இதன் விலை முறையே ரூ.18,999 மற்றும் ரூ.19,999 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையில் குறுகிய காலத்திற்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
SLAY-STREAM-SHOOT-REPEAT with the new #iQOOZ7 5G! Powered with the Mediatek Dimensity 920, Segment’s Brightest AMOLED Display* & 64MP OIS Ultra-Stable Camera, it is a #FullyLoaded smartphone for a #FullyLoadedYou. Launching on 21st Mar @amazonIN.
in its price segment pic.twitter.com/baNii0vU5D— iQOO India (@IqooInd) March 21, 2023