புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று (மார்ச்.21) இரவு நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவானது.
நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் வடக்கு டில்லி,வசுந்த்ரா ஆகிய பகுதி வாசிகள், பீதியில் வீட்டைவிட்டு வெளியே வந்தனர்.
உ.பி.மாநிலம் காசியாத்,சண்டிகர் உள்ளிட்ட நகரங்களிலும், பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், பெஷாவர், இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement