நகைச்சுவை நடிகரும், மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கோவை குணா, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது பலகுரலால் கவனம் பெற்ற நிலையில் திரைப்படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், சிறுநீரக செயல்பாட்டிற்காக கடந்த 3 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தவர், உடல்நலக்குறைவிற்காக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 55வது வயதில் உயிரிழந்தார்.