இலங்கை அமைச்சர் குழுவொன்று இன்று தென்னாபிரிக்கா பயணம்


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர்
அடங்கிய இலங்கைக் குழுவொன்று இன்று காலை தென்னாபிரிக்கா சென்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ‘உண்மையை கண்டறியும்
ஆணைக்குழுவின்’ பணியை முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான
அனுபவத்தைப் பெறுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று நீதி, சிறை விவகாரங்கள்
மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அமைச்சர் குழுவொன்று இன்று தென்னாபிரிக்கா பயணம் | Vijayadasa Ali Sabri Has Gone To South Africa

நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு

முன்னதாக, இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ. ஷால்க்,
தென்னாபிரிக்காவிற்கு சென்று தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட உண்மை
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் அனுபவத்தைப் பெறுமாறு விசேட
இராஜதந்திர அழைப்பொன்றை விடுத்திருந்தார்.

இதேவேளை தென்னாப்பிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தேசிய
ஒற்றுமை அரசாங்கத்தால் இனவெறி ஆட்சியின் போது கடத்தல்கள், கொலைகள் மற்றும்
சித்திரவதைகள் உட்பட மொத்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.