கோவை: காமெடி நடிகர் கோவை குணா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். கோவை கணபதி விநாயகபுரத்தை சேர்ந்தவர் கோவை குணா (54). இவரது மனைவி ஜூலி. இவர்களது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கோவை குணா சன் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான அசத்த போவது யார்? காமெடி ஷோ மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இதுதவிர பல்வேறு விழாக்களில் இவரது காமெடி ஷோக்கள் நடந்துள்ளன. இவர் அண்மை காலமாகவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.