ஏப்ரல் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், “சுங்கக் கட்டணத்தை வருடந்தோறும் உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து வருகின்ற 01.04.2023 அன்று காலை 11.00 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தலாம் என 20.03.2023 அன்று சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
எனவே அனைத்து உறுப்புச் சங்க நிர்வாகிகளும் தங்களுடைய கமிட்டி உறுப்பினர்கள், உறுப்பினர்கள், மற்றும் தங்கள் பகுதியில் உள்ள வாரி உரிமையாளர்களுடன் தங்களது பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் திரளாக கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டம் நடத்தி சம்மேளனத்தின் ஒற்றுமையையும், லாரி உரிமையாளர்களின் பலத்தையும் நிரூபித்து ஆர்ப்பாட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ஆர்பாட்டத்தில் கீழ்கண்ட வாசகங்களை பதாகைகளில் தயார் செய்து கொள்ளுமாறும், கண்டன ஆர்பாட்டத்திற்கு சங்கச் சாவடிகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.