அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம்


அமெரிக்காவில் பாடசாலை மாணவரால் சுடப்பட்ட ஆசிரியர் ஒருவர், பாடசாலை மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாடசாலையில் மாணவரின் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க மாகாணமான வெர்ஜினியாவில் கடந்த ஜனவரி மாதம், பாடசாலை ஆசிரியர் ஒருவர் 6 வயது மாணவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

ஒருமுறை மட்டுமே சுடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக குறித்த ஆசிரியை உயிர்தப்பினார். அவரது கை மற்றும் மார்பில் குண்டு துளைத்தது.

குறித்த சிறுவனின் பையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்ததாக வதந்திகள் பரவியது. எனினும் சோதனையின்போது ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை.

மாணவனின் பெற்றோர் அவருக்கு எங்கிருந்து ஆயுதம் கிடைத்தது என்று தெரியவில்லை என்றும், அவர் கடுமையான இயலாமையால் அவதிப்படுவதாகவும், பொதுவாக தனியாக விடப்படுவதில்லை என்றும் கூறினர்.

அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம் | File Case On School Teacher Who Shot By Teacher Us

@Abby Zwerner/Facebook

அதிர்ச்சி சம்பவம்

குறித்து விளக்கிய ஆசிரியை

இந்த நிலையில் குணமடைந்துள்ள குறித்த ஆசிரியை, மாணவர் குறித்த தனது எச்சரிக்கையை பாடசாலை நிர்வாகம் புறக்கணித்ததற்காக வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஆசிரியை கூறுகையில், ‘அது ஒரு பயங்கரமான நாள். நான் பயந்தேன். அவன் என்னை நோக்கி துப்பாக்கியை காட்டியது எனக்கு நினைவிருக்கிறது.

அவரது முகத்தின் தோற்றம், துப்பாக்கி வெடித்தது என்னால் மறக்க முடியாது. இது இனி பாதுகாப்பான வகுப்பறை அல்ல, அங்கிருந்த குழந்தைகள் கத்தினர் மற்றும் பயந்து இருந்தனர்.

நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்.

அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம் | File Case On School Teacher Who Shot By Teacher Us

@Today

அப்போது என் நுரையீரல் சரிந்தது எனக்கே தெரியாது, ஆனால் என்னால் மூச்சு விட முடியவில்லை.

என்னால மறக்க முடியாத சில விடயங்கள் உள்ளன. அந்த சம்பவம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. நீங்கள் அதை புரிந்துகொள்ள முடியாது. அதிர்ச்சி எப்போது விலகும் என்று எனக்கு தெரியவில்லை.

அந்த நாளைப் பற்றிய தெளிவான நினைவுகள், சில சமயங்களில் எனக்கு கெட்ட கனவுகள் வரும்’ என தெரிவித்துள்ளார்.  

அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம் | File Case On School Teacher Who Shot By Teacher Us

@Billy Schuerman/The Virginian-Pilot via AP, File



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.