ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தெரிவித்த நிலையில், மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கலாம் என்று மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு சில மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியை மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அளித்துள்ள பதிலில், “7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அம்சங்களை இயற்ற முடியும்” என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என கூறி தமிழக ஆளுநர் ரவி, மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்த, தற்போது மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று வெளியாகியுள்ள தகவல் ஆளும் திமுகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.