மாலுார் : யுகாதி பண்டிகைக்காக மாலுார் சிக்க திருப்பதியில் நேற்று ஆடுகள், கோழிகள் விற்பனை ஜோராக நடந்தது.
கன்னட புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, மாலுார் சிக்க திருப்பதியில் சந்தை அமைக்கப்பட்டது. இந்த சந்தைக்கு கோலார், பங்கார்பேட்டை, முல்பாகல், பெங்களூரு ரூரல், தேவனஹள்ளி.
தமிழகத்தின் ஓசூர், கிருஷ்ணகிரி, பேரிகை, ஆந்திராவின் மதனபள்ளி, சித்துார் ஆகிய இடங்களில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள்,செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
குட்டி ஆடு 3,000 ரூபாய் முதல் பெரிய ஆடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன.
இதுபோன்று நாட்டுக்கோழி கிலோ 400 ரூபாய் முதலும், பிராய்லர் கோழிகள் 250 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.
உகாதி பண்டிகையில் இறைச்சி பிரியர்களுக்காகவே இந்த சந்தை நடத்தப்பட்டதால், கோலார், பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, பலரும் ஆடுகளை வாங்கி சென்றனர்.
2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை நடந்திருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
கோலார் மாவட்டத்தில் பழம், பூ, காய்கறி விலையும் கூட வழக்கத்தை விட இரட்டிப்பானது. கிலோ 600 ரூபாய்க்கு விற்ற மல்லிகை 1,200 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு சாமந்திப்பூ 130 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற முல்லை, 1,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
மேலும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆரஞ்சு 100 ரூபாய்க்கும், 60, 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாழைப் பழம் 100 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆப்பிள் 120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்