ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங், 100 ஆண்டுகளில் நிகழாத மாற்றம் வரப்போகிறது எனவும், அதில் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம் எனவும் ரஷ்யாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
புடினுக்கு அளித்துள்ள வாக்குறுதி
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டுள்ளார் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்.
அவர் புறப்படும் முன்னர் நடந்த சந்திப்பிலேயே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.
ஆனால் சீன ஜனாதிபதியின் இந்த வார்த்தைகள் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
இனிய நண்பரே, கவனமாக இருங்கள் என புடினின் கை குலுக்கிய ஜி ஜின்பிங், அதன் பின்னரே சில்லிட வைக்கும் அந்த வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
பிப்ரவரி 2022ல் நிபந்தனைகள் ஏதுமற்ற நண்பர்களாக இருப்போம் என விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
அந்த தருணத்தில் தான், ரஷ்யாவுக்கு வருகை தரும்படி சீன ஜனாதிபதிக்கு விளாடிமிர் புடின் கோரிக்கை வைத்தார்.
அதன் பின்னர் இருவரும், தங்கள் நட்பை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.
உலக நாடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது என சீனாவும் ரஷ்யாவும் கூட்டாக விமர்சனம் முன்வைத்தது.
பிரித்தானியாவுக்கு கடுமையான விமர்சனம்
இந்த நிலையில் தான் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் மாஸ்கோவில் விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து, பல விடயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்பேறு திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
@getty
மேலும், விருந்து உபசாரங்களிலும் இருவரும் கலந்துகொண்டனர். அத்துடன், புடினை சீனாவுக்கு வருகைதர வேண்டும் என ஜி ஜின்பிங் அழைப்பும் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான், உக்ரைனுக்கு தொடர்ந்து பிரித்தானியா ஆயுதங்கள் அளிப்பதை கடுமையாக விமர்சித்து புடின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதன் ஒருமணி நேரத்திற்கு பின்னர் தான் ஜி ஜின்பிங் புடினுக்கு ஆதரவாக மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.
@epa
@reuters