டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உற்சாகமாக நடனமாடினார்.
மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு உரையாற்றினார். இறுதியில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அப்போது அங்கு நடனமாடியவர்களுடன் இணைந்து ஸ்மிருதி இரானியும் நடனமாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM