அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் ஆதரவாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் செந்தில், கவுண்டமணி காமெடியை வைத்து, தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் தியாகராஜனும் இப்படித்தான் தேர்ந்தெடுத்ததாக மீம்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவில் பெண்களை இழிவு படுத்துவதாக கூறி திமுகவினர் கொந்தளித்து, சம்பந்தப்பட்டவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது சவுக்கு சங்கர் முடிந்தால் என் மீதும் வழக்கு பதிவு செய்து பாருங்கள் என்று சவால் விட்டார்.
ஆனால் சவுக்கு சங்கர் மீது வழக்கு புகார் அளிக்காத திமுகவினர், அவரின் ஆதரவாளர் பிரதீப் என்பவர் மீது புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இன்று கும்முடிபூண்டி அருகே வைத்து பிரதீப்-யை கைது செய்துள்ளனர்.
இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள சவுக்கு சங்கர், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் ஸ்டாலின் என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும், ஆளுநரை ஆபாசமாக பேசி வரும் திமுக உறுப்பினரயும், கனிமொழி கலந்து கொண்ட அரசியல் கூட்டத்தில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுகவினையும் கைது செய்ய திராணி இருக்கிறதா? என்ற கேள்வியையும் மறைமுகமாக கேள்வி எழுப்புகிறார் சவுக்கு சங்கர்.