லெஜண்ட்ஸ் லீக் போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
லெஜண்ட்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (20) தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடிப்பெடுத்தாடிய World Giants அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றது.
World Giants அணி சார்பாக ஜெக் காலிஸ் 54 பந்துகளில் 78 ஓட்டங்களையும், ரொஸ் டேலர் 32 ஓட்டங்களையும் அதிகமாக எடுத்திருந்தனர்.
பந்து வீச்சில், அப்துர் ரசாக் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், திசர பெரேரா 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆசிய லயன்ஸ் அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியடைந்துள்ளது.
ஆசிய லயன்ஸ் அணி சார்பாக தில்ஷான் மற்றும் தரங்க, 60 பந்துகளுக்கு முறையே 58, 57 ஓட்டங்களை அதிகமாக எடுத்திருந்தனர்
இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை அப்துர் ரசாக் வென்றுள்ளதுடன், போட்டித் தொடரின் நாயகன் விருதை உபுல் தரங்க பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.