சமூகலவைத்தளங்கள் என்பது தற்போது நமது சமூகத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தகூடிடய ஒன்றாக உள்ளது. பலர் இந்த சமூகவலைத்தளங்களை நம்பியே வாழ்க்கை நாடாது அளவிற்கு உள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டில் இதற்காக தனியாக ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் தனியுரிமை பாதுகாக்க அவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அந்நாட்டு MP புருனோ ஸ்டுடெர் என்பவர் பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கற்றுத்தர அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் மூலமாக இனி பெற்றோருக்கு குழந்தைகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட அனுமதி இல்லை. அப்படியே வெளியிடவேண்டும் என்றாலும் அவர்களின் குழந்தைகளுக்கு சமூகவலைத்தளங்கள் பற்றிய அறிவும் அதே நேரம் குறிப்பிட்ட சில வயதை கடந்தவர்களாக இருக்கவேண்டும்.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில ஆபாச படங்களில் இதுபோன்ற குழந்தைகளின் படங்களை சமூகவலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு Thumbnail படமாக வைக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. இதற்காகவே இந்த புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரு பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் புகைப்படங்களை வெளியிட்டாலும் இருவருக்கும் தண்டனை வழங்கப்படும். அப்படி அவர்களின் குழந்தைகளின் புகைபடங்களை வெளியிடவேண்டும் என்றால் அவர்களின் குழந்தைகளின் வயது மற்றும் அவர்களின் பக்குவம் பற்றி பதிவிடவேண்டும். மேலும் பல பெற்றோருக்கு தங்களின் குழந்தைகளை பிரபலமாக்கி பார்க்க ஆசைப்படுவதால் பல குழந்தைகளுக்கு என்ன செய்கிறோம் என்பது எதுவும் தெரியாமலே உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்