ஹரியானாவை சேர்ந்த பெண்ணொருவர், மும்பை போலீஸ் என பெயரிட்டவர்களை நம்பி சுமார் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டிருக்கிறார்.
ஹரியானாவின் செக்டார் 43 இல் வசித்துவந்த பெண்ணொருவருக்கு, கடந்த மார்ச் 3-ம் தேதியன்று கொரியரில் நிறுவனத்திலிருந்து அழைக்கிறோம் எனச் சொல்லி ஒரு ஃபோன்கால் வந்துள்ளது. அந்த ஃபோன்காலில், ‘உங்களுக்கு வந்த சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது’ என்று கூறியிருக்கின்றனர்.
மேலும் அவர்களேவும் மும்பை காவல்துறைக்கு ஃபோன்கால் கனெக்ட் செய்வதாக கூறி செய்துள்ளனர். அடுத்தநொடியே அழைப்பு வேறொருவருக்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் இணைந்த இருவர், தங்களை “துணை போலீஸ் கமிஷனர் பால்சிங் ராஜ்புத், மும்பை போலீஸின் சைபர் க்ரைம் துறையின் அஜய் பன்சல்” என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, அந்தப்பெண்ணிடம் “உங்க ஆதார் எண் வழியாக பல குற்றச்செயல்களுக்கான பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது, பல பண மோசடிகள் நடந்துள்ளது” என்று கூறியுள்ளனர்.
அதற்கு அப்பெண் மும்பையில் எனக்கு வங்கிக்கணக்கே கிடையாது என்றுள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அவரை நம்ப வைத்துள்ளனர். மேலும் இந்த பண மோசடி குறித்து சீக்ரெட் ஆபரேஷனை ஆரம்பிக்க அப்பெண்ணிடம், ரூ.4,99,999 அனுப்ப சொல்லி எனக்கூறியுள்ளனர். பின் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர். அவரும் பயந்து பணம் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் பண பறிமாற்றத்துக்குப்பின் “செக்யூரிட்டி டெபாசிட்” ஆக கூடுதல் பணத்தை மாற்ற சொல்லியிருக்கிறார்கள். இப்படி 20,37,194 ரூபாயை அப்பெண் மாற்றியிருக்கிறார்.
அதன்பின்னேயே அந்த கொரியர் கம்பெனி – மும்பை போலீஸ் எல்லாம் போலியென ஃபோன்கால்கள் என அவருக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர் காவல்துறையில் இதுபற்றி உரிய புகார் அளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM