ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளை வைத்து பணி பெண் ஒரு கோடி ரூபாய்க்கு சொகுசு வீடு வாங்கியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவரது வீட்டு லாக்கரில் இருந்த தங்க நகைகள், வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Kovai Guna: பல கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது… நீங்கதான் நம்பர் ஒன்… மதுரை முத்து உருக்கம்!
நகைகள் திருட்டுசென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என மூன்று இடங்களில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.. லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என்றும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. Mahalakshmi: ரவீந்தர் கொடுத்த பரிசு… பூரித்துப்போன மகாலட்சுமி.. வேற லெவல் ரியாக்ஷன்!
விசாரணைஇதையடுத்து, போலீசார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்து வரும் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் விசாரணையை அவர் பக்கம் திருப்பினர் போலீசார். Mahalakshmi Ravindar: மகாலட்சுமிக்கு பிறந்த நாள்… ரவீந்தர் கொடுத்த பரிச பாருங்க!
ரூ. 95 லட்சத்துக்கு நிலம்இதையடுத்து பணி பெண் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரை போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியிருப்பதும் வாங்கிய கடனை இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தியிருப்பதும் அவர் மீதான சந்தேகத்தை அதிகமாக்கியது. தொடர் விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார் ஈஸ்வரி.
Jeevitha: நாங்க எப்போ வேணாலும் ரூம்முக்கு வருவோம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குநர்.. பிரபல நடிகை திடுக்!
நகைக்கடையில் விற்பனைமேலும் திருடிய நகைகளை எல்லாம் சென்னை மைலாப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஈஸ்வரி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யாவின் நகைகளை விற்று அதன்மூலம் ஈஸ்வரி வாங்கிய சொத்துக்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஈஸ்வரியிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
Kota srinivasa rao: ‘சொக்கத் தங்கம் ஜுவல்லரி’ கோட்டா சீனிவாச ராவ்வுக்கு என்ன ஆச்சு? தீயாய் பரவும் வதந்தி!
பெரும் பரபரப்புஇந்த குற்றச்செயலில் ஈடுபட ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து, அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 4 வருடங்களாக சிறுக சிறுக தங்க வைர நகைகளை திருடிய பணி பெண் அதை வைத்து ஒரு கோடி ரூபாய்க்கு சொகுசு வீடு வாங்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பிறகு ‘அதை’ கைவிட்ட மகாலட்சுமி!
Aishwarya Rajinikanth