அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் உட்கட்சி பூசல்கள் எப்போது முடிவுக்கு வரும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் மேற்குறிப்பிட்ட சிவில் வழக்கு என்பது முதல்படி என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இன்னும் பல முறையீடுகள் செய்யப்படும். உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு, விசாரணை, தீர்ப்பு என சட்டப் போராட்டம் தொடரவே அதிக வாய்ப்புள்ளது.
சசிகலா வழக்கு
இதற்கிடையில் சசிகலாவின் வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் இணைந்து கீழமை நீதிமன்றத்தில் சசிகலாவிற்கு எதிராக வழக்கு போட்டார்கள். அந்த வழக்கில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தான் அதிகாரம் படைத்த தலைவர்கள் என்று
,
ஆகியோர் சத்திய பிரமாண வாக்குமூலம் அளித்தனர்.
எடப்பாடி நிலைப்பாடு
இதே நிலைப்பாட்டில் தான் ஓ.பன்னீர்செல்வம் தற்போதும் இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துள்ளது. அப்படியெனில் எடப்பாடி தனது சத்திய பிரமாண வாக்குமூலத்தை மாற்றி நீதிமன்றத்தில் பதில் அளித்தால் முரண் தடை வரும். இதை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது. வழக்கமாக உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட யோசிக்கும்.
நீதிமன்ற விசாரணை
பெரும்பாலும் தவிர்க்கவே விரும்பும். ஆனால் அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரத்தில் வழக்குகளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இதுதவிர உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் தான் அமலில் இருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளது.
தீர்ப்பு யாருக்கு சாதகம்
இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தீர்ப்பு என்பது இருதரப்பிற்கும் சமமான வாய்ப்பாகவே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை எடப்பாடி தரப்பிற்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ் தரப்பு உடனடியாக மேல்முறையீட்டிற்கு செல்லக்கூடும்.
மேல்முறையீடு
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை வாங்க முயற்சிப்பர். இவ்வாறு முறையீடு, மேல்முறையீடு என நீதிமன்ற கதவுகளை தட்டி கொண்டே இருப்பதால் உட்கட்சி பிரச்சினையில் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்று கடந்த கால வரலாறுகள் கூறுகின்றன. மக்கள் மன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்பே இறுதியாக வென்றிருக்கிறது.
மக்களவை தேர்தல்
அவர்களின் ஆதரவு பெற்ற நபர்களே தலைவர்களாக முடி சூடியிருக்கின்றனர். ஆனால் ஓபிஎஸ்க்கு வேறு வழியில்லை. அவரது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தின் படிகளை தொடர்ச்சியாக ஏற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 2024 மக்களவை தேர்தல் வரை அதிமுகவில் புயல் ஓயாது என்றும், அதன்பிறகே இறுதி முடிவு எட்டப்படும் என்றும் சொல்லப்படுகிறது.